search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுர்த்தி விழா"

    • காரைக்குடியில் லட்சுமி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி போக்குவரத்து நகரில் உள்ள லட்சுமி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிசேகம், ஆரா தனை நடைபெற்றது.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார். ஒன்றிய கவுன்சி லர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை சாக் கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் ராமு, மாவட்ட மகளிரணி தலைவி சித்திராதேவி, நகர மகளி ரணி செயலாளர் சுலோச் சனா, ஒன்றிய கவுன்சிலர்கள் தேவி மீனாள், தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் மகேந்திரன், நாகராஜன், வட்ட செய லாளர் சீனிவாசன், கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் லட்சுமி விநாயகரின் வீதி உலா நடைபெற்றது.

    • கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.
    • விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முதல் நாள் திருவிழாவான நேற்று கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், 12-ந்தேதி பூத வாகனத்திலும், 13-ந்தேதி கமல வாகனத்திலும், 14-ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16-ந்தேதி மயில் வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதேபோல் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மதுரை-மடப்புரம் விலக்கில் உள்ள விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதில் கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை (4-ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலையைில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை (4-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய் களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் 9-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் (6ந்-தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை மறுநாள் வியாழக்கிழமை (6-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது. பொது வாக விநாயகருக்கு அரு கம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய் களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை (9ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதத்துக்கான சங்கடஹர சதுர்த்தி நாளை(9-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
    • சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    மதுரை

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் திருக்கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை (9-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    • மாலை 5 மணிக்கு 108 பானை சர்க்கரை பொங்கல் வழிபாடு நடக்கிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    மேலச்சூரங்குடியில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (27-ந்தேதி) தொடங்குகிறது. தொடர்ந்து 31-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி நாளை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை மூல மந்திர ஹோமம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் காலை 8 மணிக்கு சிற்றுண்டி நடக்கிறது. தொடர்ந்து 28, 29, 30-ந்தேதிகளில் சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி அன்று காலை 7 மணிக்கு ஆதிலிங்க விநாயகர் கோவிலில் இருந்து சிங்காரி மேளத்துடன் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வருதல் நடக்கிறது. தொடர்ந்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, மற்றும் மதியம் அன்னதானம் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு 108 பானை சர்க்கரை பொங்கல் வழிபாடு நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
    • மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அரியலூர்:

    மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கணக்க விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உட்கோட்டை, குருவாலப்பர்கோவில், சுண்ணாம்பு குழி, சம்போடை, குறுக்கு ரோடு, பள்ளிவிடை, பாகல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×